கோடை கால மேகங்கள்
சுடுகின்ற தேகங்கள்
அவளின் குளிர்கின்ற பார்வைகள்
மனதில் தளிர் விடும் மோகங்கள்
கோடை கால மேகங்கள்
சுடுகின்ற தேகங்கள்
அவளின் குளிர்கின்ற பார்வைகள்
மனதில் தளிர் விடும் மோகங்கள்
சிறகை விரிக்கும் கனவுகள்
வானில் பறக்கும் நினைவுகள்
உள்ளத்தில் காதல் கீதங்கள்
உறவுகளை எண்ணி ஏக்கங்கள்
இமைகளை வெறுத்திடும் விழிகள்
இதழ்களில் வடிகின்ற தேன் துளிகள்
இதயத்தில் மலர்ந்திட்ட அரும்புகள்
இளமை செய்திடும் குறும்புகள்
கோடை கால மேகங்கள்
சுடுகின்ற தேகங்கள்
அவளின் குளிர்கின்ற பார்வைகள்
மனதில் தளிர் விடும் மோகங்கள்
மூடுபனி காலங்கள்
போதை ஏற்றும் பார்வைகள்
வெட்கம் கொள்ளும் பாவையே உன் மேனி ஆகிடும் போர்வையே
உன் மடிசாய மனம் ஏங்குது
உள்ளில் இளமை ஊஞ்சலாடுது
உறவை தினம் நினைக்குது
உதயத்தை கண்கள் வெறுக்குது
உறவை தினம் நினைக்குது
உதயத்தை கண்கள் வெறுக்குது
கோடை கால மேகங்கள்
சுடுகின்ற தேகங்கள்
அவளின் குளிர்கின்ற பார்வைகள்
மனதில் தளிர் விடும் மோகங்கள்
மனதில் தளிர் விடும் மோகங்கள்