வாக்காள பெருங்குடி மக்களே
எதிர் காலம் கண்ணெதிரில் நிக்குதே
புதிர் போடும் இந்த தேர்தலே
பதில் கூறு கை விரலின் மையிலே
பழையதை களை
புதியன விதை
விலங்கினை உடை
விடுதலை அடை
வாக்காள பெருங்குடி மக்களே
எதிர் காலம் கண்ணெதிரில் நிக்குதே
புதிர் போடும் இந்த தேர்தலே
பதில் கூறு கை விரலின் மையிலே
விடியலை அமை தினம்
பொங்கட்டும் உலை
வலிமையை பெறு
. வளமையை பெறு
வலிகளை விடு- புது
வழிகளை தொடு
வாக்காள பெருங்குடி மக்களே
எதிர் காலம் கண்ணெதிரில் நிக்குதே
புதிர் போடும் இந்த தேர்தலே
பதில் கூறு கை விரலின் மையிலே
விதியினை மாற்ற
விரலில் மை இடு
வளங்கள் பெற தேர்தல்
களம் என நம்பு
வாக்காள பெருங்குடி மக்களே
எதிர் காலம் கண்ணெதிரில் நிக்குதே
புதிர் போடும் இந்த தேர்தலே
பதில் கூறு கை விரலின் மையிலே