ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
நீலவான நதியினில்
நீந்துகின்ற அழகே
நீலவான நதியினில்
நீந்துகின்ற அழகே
விழிகள் இரண்டும் இதயத்தை
தாக்கும் விண்கற்களோ
மொழிகள் யாவும் உதயத்தை
வரவேற்கும் பூபாளமோ
மாதுளம் சாறு எடுத்து
வண்ணம் சேர்த்த இதழ்களோ
பார்வையில் போதை ஏற்றும்
பாதை தடு மாறும் நாட்களே
செந்தூரம் தடவியது போல்
சிவந்திருக்கும் இரு கண்ணம்
சந்தனம் பூசியது போல்
மேனியில் வீசுது புது நறுமணம்
நீலவான நதியினில்
நீந்துகின்ற அழகே
விழிகள் இரண்டும் இதயத்தை
தாக்கும் விண்கற்களோ
மொழிகள் யாவும் உதயத்தை
வரவேற்கும் பூபாளமோ
கார் மேகத்தை கடைந்தெடுத்து
பின்னியது போல் அவள் குழல்
தேன் அடையை குழைத்தெடுத்து
தெளித்தது போல் அவள் குரல்
இயற்கை விரும்பும் பருவமோ நீ
அழகின் மொத்த உருவமே
இளமை என்னும் அதிசயம் நீ
இறைவன் படைத்த அற்புதம்
நீலவான நதியினில்
நீந்துகின்ற அழகே
விழிகள் இரண்டும் இதயத்தை
தாக்கும் விண்கற்களோ
மொழிகள் யாவும் உதயத்தை
வரவேற்கும் பூபாளமோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
நீலவான நதியினில்
நீந்துகின்ற அழகே