வருவாய் வருவாய் வடிவேலா
வருவாய் வருவாய் வடிவேலா
வரம் தருவாய் அருள்வாய் சிவபாலா
வருவாய் வருவாய் வடிவேலா
வரம் தருவாய் அருள்வாய் சிவபாலா
வணங்கினோம் உனையே திருக்குமரா
வருத்தங்கள் களைவாய் சிவக்குமரா
முருகா முருகா என்றழைத்தோம்
உள்ளம் உருக உனை தொழுதோம்
அறுபடை ஆலயங்கள் நாடி வந்தோம்
அரோகரா என பாடி வந்தோம்
அரோகரா என பாடி வந்தோம்
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
ஆண்டியாய் பழனியில் கோலம் கொண்டாய்
வேண்டியே வந்தோர்க்கு எளிமை
தோற்றம் தந்தாய்
பிரணவ மந்திரம் தந்தைக்கு நீ
உரைத்தாய்
பிறவியின் பயனை அருளால்
போதித்தாய்
வருவாய் வருவாய் வடிவேலா
வரம் தருவாய் அருள்வாய் சிவபாலா
வணங்கினோம் உனையே திருக்குமரா
வருத்தங்கள் களைவாய் சிவக்குமரா
குன்று இருக்கும் இடம் யாவும்
நீ இருக்கும் இடம் குமரா
கவலைகள் கொண்டு இருக்கும்
மனங்களில் அகற்றிடு வெற்றிவேலா
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வேலாயுதா
வருவாய் வருவாய் வடிவேலா
வரம் தருவாய் அருள்வாய் சிவபாலா
வணங்கினோம் உனையே திருக்குமரா
வருத்தங்கள் களைவாய் சிவக்குமரா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா