🎼 MUSIC FRAME (NOT TO BE SUNG)
Rāga: Śuddha Sāveri (word-clarity friendly, open vowels, strong projection)
Tempo: Slow–Medium
BGM: Tamil instruments only + gentle bird ambience (parrots, kuyil, love-birds, sparrows)
Instruments: Veena · Flute · Yazh-like plucks · Mridangam (soft) · Tanpura drone
[🎵 INTRO (Instrumental | 12–15 sec)
Tanpura + veena outline rāga; sparrow/love-bird ambience; one kuyil call leads into Pallavi.]
[🎵 PALLAVI (CHORUS · Repeat Twice) — Verse 990 (Verbatim)]
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்றா,
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்ற மலர் நோக்கி, ‘ எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி! ‘என்று ஓர் குயிலைக் கரம் கூப்பி நின்றாள்.
(Repeat again; second time slightly fuller chorus; flute answers the last line.)
[🎵 SARANAM 1 (Female Solo) — Verses 907 + 926 (Verbatim)
Verse 907 ]
உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி,
மெய்க் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்கத்,
தொக்க மெல் மர நிழல்படத் துவன்றிய சூழல்புக்க
மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார்
[ Verse 926
வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம்
துயில் உணர் செவ்வியாரும், துனியுறு முனிவினாரும்,
குயிலொடும் இனிது பேசிச், சிலம்பொடும் இனிது கூவி,
மயிலினம் திரிவ என்னத், திரிந்தனர் மகளிர் எல்லாம்.
[🎵 PALLAVI (CHORUS · Once)]
[🎵 SARANAM 2 (Female Solo) — Verses 898 + 972 (Verbatim)
Verse 898]
கோவை ஆர் வட, கொழும் குவடு ஒடிதர, நிவந்த,
ஆவி வேட்டன, வரி சிலை அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை, சிலர் புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும் சந்தினும் பூட்டின சில மா
[Verse 972]
மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும்.
[🎵 PALLAVI (CHORUS · Once)]
[🎵 SARANAM 3 (Female Solo) — Verses 986 + 971 (Verbatim)
Verse 986]
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்,
நறும் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறும் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல வேண்டு போதும்;
உறும் போகம் எல்லாம் நலன் உள்வழி உண்பர் அன்றே?
[Verse 971]
மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை;
பண்ணும் நரம்பில் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் உடை வேய் இசை, கண் உளர் ஆடல் தோறும்,
விண்ணும் மருளும்படி, விம்மி எழுந்த அன்றே.
[🎵 PALLAVI (CHORUS · Once)]
[🎵 SARANAM 4 (Female Solo) — Verses 970 + 908 (Verbatim)
Verse 970]
மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரில் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை.
[Verse 908]
தளம் கொள் தாமரை எனத் தளிர் அடியினும் முகத்தும்
வளம் கொள் மாலைவண்டு அலமர, வழி வருந்தினராய்,
விளங்கு தம் உருப் பளிங்கு இடை வெளிப்பட, வேறு ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத், துயின்றார்.
[🎵 OUTRO
PALLAVI (CHORUS · Twice, very soft)
Veena holds the final note; flute sighs; birds fade (8–10 sec)]
----------------------
[Kambaramayanam – Bālakāṇḍam | வரை காட்சி படலம்]
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]