[[INTRODUCTION — NOT TO BE SUNG | SPOKEN / LINER NOTE]]
[[Reproduced selected verses from Bharathiar’s original poetry
titled “கண்ணன் என் தந்தை”.
This poem is not narrow devotional bhakti.
Bharathiar presents Kannan as universal human consciousness —
not a sectarian god, not a temple idol,
but father, comrade, guide, labourer, lover, child, and ruler.
Through Kannan, Bharathiar breaks caste hierarchy,
rejects ritual superiority, dissolves religious boundaries,
and places the divine among ordinary people.
This reflects Bharathiar’s larger vision:
Vedantic universalism and radical social equality.]]
[🎵 PALLAVI]
[[Male Lead – Subu voice | Sing with dignity | Repeat pattern defined below]]
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
பயமில்லை, மூப்பு மில்லை – என்றும்
தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
🎵 SARANAM 1
[[Female Voice or Soft Chorus]]
பூமிக் கெனைய னுப்பி னான் – அந்தப்
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே – இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே;
போமித் தரைகளி லெல்லாம் – மனம்
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்;
சாமி இவற்றினுக் கெல்லாம் – எங்க
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்.
🎵 SARANAM 2
[[Female Voice continues | Slight melodic lift]]
பிறந்தது மறக் குலத்தில் – அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே – சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான் – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான் – உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
🎵 PALLAVI (REPRISE)
[[Male Lead – Subu voice | Repeat ONCE after two Saranams]]
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
பயமில்லை, மூப்பு மில்லை – என்றும்
தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
🎵 SARANAM 3
[[Female Voice / Chorus | Earthy, grounded]]
ஏழைகளைத் தோழமை கொள்வான் – செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான் – ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை;
பாழிடத்தை நாடி யிருப்பான் – பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.
🎵 SARANAM 4
[[Female Chorus | Slightly reflective]]
வேதங்கள் கோத்து வைத்தான் – அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் – சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.
🎵 SARANAM 5
[[Female Voice → Chorus swell towards end]]
நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்;
சீலம் அறிவு கருமம் – இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே – வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்;
போலிச் சுவடியை யெல்லாம் – இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்.
🎵 PALLAVI (FINAL)
[[Male Lead – Subu voice | Repeat TWICE or THRICE | Gradual fade]]
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
பயமில்லை, மூப்பு மில்லை – என்றும்
தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
[[Last repeat: instruments thin out, tanpura + flute only]]
A CREAM PRODUCTION