நீரின்றி அமையா உலகு "நீ"யின்றி எனக்கு ஏதம்மா அழகு
காதலுக்கு கற்பனை அழகு ஆனால் என் காதல் கற்பனையில் மட்டுமே அழகு
உலகிற்கு ஆயிரமாயிரம் குறள் ஆயின்; எமக்கு நீ-மட்டுமே பொருள்
முப்பால்! அறிந்தவன் நானடி உன் சிரிப்பால்! சிதைக்க பட்டேன்
ஈரடி யில் அடைக்க தெரியவில்லையடி உன் அழகை. காத்திரு கட்டுரை பழகட்டும் என் விரல்...
கிடைப்பது நீயாக இருந்தால் இழப்பது எதுவாக இருந்தாலும் சரி !
இரு வரிகளில் அகிலத்தை அடக்கிய நான். உமது விழிகளின் வலிமையில். வரிகளை துளைத்து நிற்கின்றேன்
ஆயிரம் குறள் எழுதும் முன் உன் குரலைக் கேட்டு இருந்தால் அவ்வாயிரம் குறளும் உன் குரலை பற்றி தான் இருந்திருக்கும்