லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
ஆசைகள் ஆசைகள்
மனதில் நூறு ஆசைகள்
ஆசைகள் ஆசைகள்
மனதில் நூறு ஆசைகள்
பாஷைகள் பாஷைகள்
கடவுளுக்கும் புரியா பாஷைகள்
பாஷைகள் பாஷைகள்
கடவுளுக்கும் புரியா பாஷைகள்
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
ஆசைகள் ஆசைகள்
மனதில் நூறு ஆசைகள்
பாஷைகள் பாஷைகள்
கடவுளுக்கும் புரியாத பாஷைகள்
வான்முகில்களின் மேல் நடக்கணும்
வானவில்லின் மீது உறங்கனும்
மின்னலில் மாலை கோர்க்கணும்ம்
கார்மேகத்தை உடையாக்கி அணியனும்
மின்னலில் மாலை கோர்க்கணும்ம்
கார்மேகத்தை உடையாக்கி அணியனும்
இடியுடன் இன்னிசை பாடனும்
மழைநீரில் விண்ணில் நீந்தனும்
பிறைநிலவை படகாக்கணும்
விண்மீன்களுக்கு வலை வீசனும்
பிறைநிலவை படகாக்கணும்
விண்மீன்களுக்கு வலை வீசனும்
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
ஆசைகள் ஆசைகள்
மனதில் நூறு ஆசைகள்
பாஷைகள் பாஷைகள்
கடவுளுக்கும் புரியா பாஷைகள்
காற்றினுள் விதைகள் விதைக்கணும்
பனித்துளியால் நீரை ஊற்றனும்
கதிரினால் அறுவடை செய்யணும்
காலங்களை மாற்றி அனுப்பனும்
கதிரினால் அறுவடை செய்யணும்
காலங்களை மாற்றி அனுப்பனும்
பூமியை புதிதாக மாற்றணும்
பொதுமொழி ஒன்று உருவாக்கணும்
பறவைகள் போல் எல்லாரும் பறக்கணும்
படைத்த கடவுளையே மனிதனாக மாற்றணும்
பறவைகள் போல் எல்லாரும் பறக்கணும்
படைத்த கடவுளையே மனிதனாக மாற்றணும்
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
ஆசைகள் ஆசைகள்
மனதில் நூறு ஆசைகள்
பாஷைகள் பாஷைகள்
கடவுளுக்கும் புரியா பாஷைகள்
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல