--------------------
[🎶 ZONA-READY SONG SHEET
Title: கவிமணியின் பாரி வள்ளல்
English Title: Kavimaniyin Paari Vallal
Lyrics: Kavimani Thesiga Vinayagam Pillai
Production: SubuAsksubu · CREAM
🎼 MUSIC DNA (Not to be sung)
Mood: Gentle admiration → Moral wonder → Quiet awe
Style Reference: English folk-pop ballad structure (Come September feel)
Tempo: Slow–Medium (≈ 72–76 BPM)
Instruments: Veena · Acoustic guitar · Soft strings · Tambura drone
Voices:
Girl 1 (Narrative)
Girl 2 (Reflective)
Chorus (Pallavi & Outro)]
----------------------------
[🎵 PALLAVI (CHORUS · Repeat Twice)]
முல்லைப் படரத் தேரைக் கொடுத்த வள்ளல் பாரிபோல்—
அடியே, மிகவும் நல்ல மனிதர் ஒருவர் உண்டோ?
சொல்லடி.
[🎵 SARANAM 1 (Girl 1)]
முத்து, பவளம், மணி இழைத்த தேரைப் பாரடி—
அதில் மிடுக்குடனே செல்லும் அந்த மனிதர் யாரடி?
எத்திசையும் புகழ் மணக்கும் பாரி தானடி—
அவர் இல்லையென்றே சொல்லிடாத வள்ளல் தானடி.
[🎵 SARANAM 2 (Girl 2)]
சாலை ஓரம் அந்தத் தேரும் நிற்ப தேனடி?—
அங்கே சட்டென்று அவரும் கீழிறங்கி பார்ப்ப தென்னடி?
மாலைக் காற்றில் ஆடி அசையும் முல்லைக் கொடியடி—
அதை வழியில்கண்டே வேகமாக இறங்கினாரடி.
[🎵 PALLAVI (CHORUS · Once · Light Harmony)]
முல்லைப் படரத் தேரைக் கொடுத்த வள்ளல் பாரிபோல்—
அடியே, மிகவும் நல்ல மனிதர் ஒருவர் உண்டோ?
சொல்லடி.
[🎵 SARANAM 3 (Girl 1)]
உற்றே அந்தக் கொடியை அவரும் பார்ப்ப தேனடி?—
அவர் உள்ளம் நொந்து முகமும்வாடி நிற்ப தேனடி?
பற்றிப் படரக் கொம்பில்லாமல் முல்லைக் கொடியுமே—
காற்றில் சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி கண்டு தானடி.
[🎵 SARANAM 4 (Girl 2)]
தேரைக் கொடியின் அருகில் கொண்டு செல்வதேனடி?—
அங்கே சென்று கொடியைக் கையில் அவரும் எடுப்ப தேனடி?
தேரின் மீது கொடியைப் படர விடுகிறாரடி—
அதன் சிரமம் தீர்த்து மகிழ்ச்சியோடு நடக்கிறாரடி.
[🎵 PALLAVI (CHORUS · Once · Fuller Harmony)]
இந்த முல்லைப் படரத் தேரைக் கொடுத்த வள்ளல் பாரிபோல்—
அடியே, மிகவும் நல்ல மனிதர் ஒருவர் உண்டோ?
நீயே சொல்லடி.
[🎵 OUTRO (CHORUS · Slow Fade)]
இல்லை, இல்லை, இல்லை என்றே சொல்கிறேனடி—
நாம் எங்கு தேடிப் பார்த்திட்டாலும் கிடைத்திடாரடி!
(Veena answers last line · Tambura sustains · 8–10 sec instrumental fade)
[🎵 FINAL PALLAVI (CHORUS · Whisper → Fade Out)]
முல்லைப் படரத் தேரைக் கொடுத்த வள்ளல் பாரிபோல்—
அடியே…
மிகவும் நல்ல மனிதர் ஒருவர்…
உண்டோ…
(Fade to silence)
[✅ ZONA USAGE NOTES
Open-vowel endings → smooth AI singing
Clear Girl 1 / Girl 2 alternation
Pallavi designed for chorus looping
Total duration: ~4.2–4.5 minutes
No spoken intro inside song (safe for tribute usage)]
------------------
கவிமணியின் பாரி வள்ளல்
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU