பிறப்பும் நம் கையில் இல்லை!
இறப்பும் நம் கையில் இல்லை!
வாழ்வென்ற பாதையில் நடந்திடும்.,
வழிப்போக்கர் நாமெல்லாம்!!
பயணம் செல்கிறோம்
மரணம் தேடியே ..
பலதும் வென்றிட்டோம்
மகிழ்ச்சி கூடியே..
பகையும் புகழொடு
ஈட்டிய செல்வமும் ,
புகையாகும் மெய்யுடன்
போயிட கூடுமே!
மரணத்தினை வென்றிட பிறந்தவரில்லை...
மரணத்தின் பின்
அறிந்தவர் இங்கில்லை
மாற்றஙகள் இல்லா
மனிதர்கள் இல்லை..
மரணமில்லாமல்
மாற்றங்கள் இல்லை...
இயற்கையின் வியப்பில்
பிறந்திட்ட ஜனனம்...
இயற்கையின் களைப்பால்
முடிவுறும் ஜென்மம் ...
பிறப்பினை போல் ஒரு
தொடர்கதை இல்லை...
இறப்பினை போல் ஒரு முடிவுரையில்லை...