🎵 ZONA-READY MALE–FEMALE DUET VERSION
“ஒன்றிருந்தால் ஒன்றில்லை” – (Retro Duet Edition)
(Pattukottai Kalyanasundaram · Nalla Theerppu, 1959)
---
🎶 PALLAVI – DUET CALL & RESPONSE
Female:
அது இருந்தால் — இது இல்லை!
Male:
இது இருந்தால் — அது இல்லை!
Together (Harmony):
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்—
அவனுக்கிங்கே இடமில்லை… இடமில்லை…
(Short retro interlude: Clarinet + Accordion)
---
🎼 SARANAM 1 – “உண்மை & நம்பிக்கை”
Male (soft satire):
எல்லோரும் நம்பும்படி
சொல்லும் திறனிருந்தால்—
சொல்லிலே உண்மை இல்லை…
Female (counter-voice):
உள்ளதை உள்ளபடி
சொல்லும் மனிதனிடம்
உணர்ந்திடும் திறமையில்லை…
Together (flowing harmony):
உண்மையும் நம்பவைக்கும்
திறனும் அமைந்திருந்தால்—
உலகம் அதை ஏற்பதில்லை!
➤ Refrain – Duet
Both:
அது இருந்தால் — இது இல்லை…
இது இருந்தால் — அது இல்லை…
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்—
அவனுக்கிங்கே இடமில்லை…
---
🎼 SARANAM 2 – “கல்வி & வேலை”
Female (youthful tone):
பள்ளி செல்லும் மாணவர்க்குப்
படிப்பு வந்தால் பணமில்லை…
Male (mildly teasing):
பணமிருந்தால் இளைஞருக்குப்
படிப்பதிலே மனமில்லை…
Female (build-up):
மனமிருந்து படிப்பு வந்து
பரீட்சையிலும் தேறி விட்டால்—
Male (punchline style):
பல படிகள் ஏறி இறங்கிப்
பார்த்தாலும் வேலையில்லை!
➤ Refrain – Duet
அது இருந்தால் — இது இல்லை…
இது இருந்தால் — அது இல்லை…
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்—
அவனுக்கிங்கே இடமில்லை…
---
🎼 SARANAM 3 – “பொதுப்பணி & பொருள்”
Male (serious tone):
பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லை…
Female:
பொருளும் புகழும் சேர்ந்த பின்னே
பொதுப்பணியில் நினைவில்லை…
Male:
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்—
Female (sharp delivery):
போட்ட திட்டம் நிறைவேற
கூட்டாளிகள் சரியில்லை!
➤ Refrain – Duet
அது இருந்தால் — இது இல்லை…
இது இருந்தால் — அது இல்லை…
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்—
அவனுக்கிங்கே இடமில்லை…
---
🎼 SARANAM 4 – “அழகு & அறிவு”
Female (playful tease):
அங்கமதில் மங்கையர்க்கு
அழகிருந்தால் அறிவில்லை…
Male (smiling comeback):
ஆராய்ந்து முடிவு செய்யும்
அரிவிருந்தால் அழகில்லை…
Female (soft irony):
அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
அதிசயமாய்ப் பிறந்தாலும்—
Together (tight harmony):
குறுகு மனம் கொண்டவர்கள்
குலைக்காமல் விடுவதில்லை…
➤ Refrain – Finale (Duet · Slow Fade)
அது இருந்தால் — இது இல்லை…
இது இருந்தால் — அது இல்லை…
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்—
அவனுக்கிங்கே இடமில்லை… இடமில்லை…
(Accordion + Strings fade out)
----------
Original lyrics of Pattukkotai கல்யாண சுந்தரம்
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU