[[🎶 ZONA-READY SONG (TAMIL ONLY)
📜 Title: Ther Koduthavar [Paari Vallal]
தேர்க் கொடுத்தவர் (பாரி வள்ளல்)]]
[🎵 PALLAVI (CHORUS · Repeat Twice)]
முல்லைப் படரத் தேரைக் கொடுத்த
வள்ளல் பாரிபோல்—அடியே,
மிகவும் நல்ல மனிதர் ஒருவர்
உண்டோ? சொல்லடி.
🎵 SARANAM 1 (Girl 1)
முத்து, பவளம், மணி இழைத்த
தேரைப் பாரடி—அதில்
மிடுக்குடனே செல்லும் அந்த
மனிதர் யாரடி?
எத்திசையும் புகழ் மணக்கும்
பாரி தானடி—அவர்
இல்லையென்றே சொல்லிடாத
வள்ளல் தானடி.
[🎵 SARANAM 2 (Girl 2)]
சாலை ஓரம் அந்தத் தேரும்
நிற்ப தேனடி?—அங்கே
சட்டென்று அவரும் கீழிறங்கி
பார்ப்ப தென்னடி?
மாலைக் காற்றில் ஆடி அசையும்
முல்லைக் கொடியடி—அதை
வழியில்கண்டே வேகமாக
இறங்கினாரடி.
[🎵 SARANAM 3 (Girl 1)]
உற்றே அந்தக் கொடியை அவரும்
பார்ப்ப தேனடி?—அவர்
உள்ளம் நொந்து முகமும்வாடி
நிற்ப தேனடி?
பற்றிப் படரக் கொம்பில்லாமல்
முல்லைக் கொடியுமே—காற்றில்
சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி
கண்டு தானடி.
[🎵 SARANAM 4 (Girl 2)]
தேரைக் கொடியின் அருகில் கொண்டு
செல்வதேனடி?—அங்கே
சென்று கொடியைக் கையில் அவரும்
எடுப்ப தேனடி?
தேரின் மீது கொடியைப் படர
விடுகிறாரடி—அதன்
சிரமம் தீர்த்து மகிழ்ச்சியோடு
நடக்கிறாரடி.
[🎵 PALLAVI (CHORUS · Once · Fuller Harmony)]
இந்த முல்லைப் படரத் தேரைக் கொடுத்த
வள்ளல் பாரிபோல்—அடியே,
மிகவும் நல்ல மனிதர் ஒருவர்
உண்டோ? நீயே சொல்லடி.
[🎵 OUTRO (CHORUS · Slow Fade)]
இல்லை, இல்லை, இல்லை என்றே
சொல்கிறேனடி—நாம்
எங்கு தேடிப் பார்த்திட்டாலும்
கிடைத்திடாரடி!
(வீணை + தம்புரா fade · 8–10 sec)
----------------------
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU
பாடல்: "தேர்க் கொடுத்தவர் "(பாரி வள்ளல்)
Title: Ther Koduthavar [Paari Vallal]
By Kavimani Thesiga Vinayagam Pillai]