[Title:-மெத்தனப் போக்கு!]
[Pallavi]
படிப்பு இல்லாதவன் பதவியில் இருந்தால் தவறில்லை
ஆனால் பொறுப்பு இல்லாதவன் பதவியில் இருப்பது சரியில்லை
படிப்பு இல்லாதவன் பதவியில் இருந்தால் தவறில்லை
ஆனால் பொறுப்பு இல்லாதவன் பதவியில் இருப்பது சரியில்லை
எந்த நாட்டுக்கும் அது சரியில்லை!
[Saranam 1]
முந்தைய அரசு ஆமை போல் நடக்குது அதை அடித்து விரட்டி ஒரு வெள்ளை முயலைக் கொண்டு வர மக்கள் நினைத்தார்கள்
அவர்களின் எண்ணம் என்னவோ தவறில்லை
ஆனால் பின்பு அது கருப்பு ஆடு ஆகும் என்று யாருக்கும் தெரியவில்லை
யாருக்குமே தெரியவில்லை
[Pallavi repeat]
படிப்பு இல்லாதவன் பதவியில் இருந்தால் தவறில்லை
ஆனால் பொறுப்பு இல்லாதவன் பதவியில் இருப்பது சரியில்லை
[Saranam 2]
புதிய அரசு புதுபுது மசோதாக்கள் கொண்டு வந்தது; மக்களை
புதுப்புது முழக்கங்கள் செய்யச் சொன்னது
அவரை எப்பொழுதும் வரிசைகளில் நிற்க வைத்தது
வரிச்சுமை தாறுமாறாக மக்கள் தலையில் ஏற்றி வைத்தது!
தலையில் ஏற்றி வைத்தது!
[Pallavi repeat]
படிப்பு இல்லாதவன் பதவியில் இருந்தால் தவறில்லை
ஆனால் பொறுப்பு இல்லாதவன் பதவியில் இருப்பது சரியில்லை
[Saranam 3]
தகுதி இல்லாதவர் பெரிய பதவியில் அமர்ந்தனர்
பொறுப்பு இல்லாமல் தவறு பல செய்தனர்
மக்கள் சகிக்க முடியாமல் போராட்டம் நடத்தினர்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
அதை கண்டு கொள்ளாமல் ஒரு அரசு இருக்குமா?
இந்த மெத்தன போக்கு அரசு இன்னும் நீடிக்குமா?
சொல்லுங்கள் நீடிக்குமா?
[Pallavi repeat]
படிப்பு இல்லாதவன் பதவியில் இருந்தால் தவறில்லை
ஆனால் பொறுப்பு இல்லாதவன் பதவியில் இருப்பது சரியில்லை
[Outro fadeout]
பதவியில் இருப்பது என்றுமே சரியில்லை