அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்
உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
உன்னை போல பூமி இல்ல உன்னை விட சாமி இல்ல
சொல்ல வார்த்த ஏதும் இல்ல உன் சொல்ல விட வேதம் இல்ல
கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
கடவுளும் கூட நிகரில்ல அப்பா
வறுமைய சொன்னதில்ல நீ
வாடி மனம் நின்னதில்ல
எதையுமே தனக்குனு நீ இதுவர எண்ணவில்ல
சொத்து சொகம் வந்ததில்லை ஒரு சொந்தம் அள்ளி தந்ததில்லை
எத்தனையோ துன்பத்திலும் நீ யாரையுமே நிண்டதில்லை
உழைச்சு உழைச்சு நீ ஓடான நான் எழுத படிக்க நீ ஏடான
மேற்வ வழிப்போகும் தேரான நான் நெலச்சு நிக்க நீ வேரான
அல்லும் பகலும் துயர கடலில் நீராடி
என்ன ஆலமரமா ஆளாக்குன போராடி
அப்பா நீ மந்திரமா பாடுபட்ட எந்திரமா
நம்பிக்கையா நீ இருந்த நான் வளர்ந்தேன் கோபுரமா
ஓயாத சக்கரமா கண்ணிமை போல் பத்திரமா
என்ன பாதுகாத்து நீ வளர்த்த பால்க நான் சொல்லனுமா
கோயில் சாய்த்தென்ன ஆரட்டி
தொவண்டு விழும் போது சீராட்டி
பாச மலர் தூவி பாராட்டி பக்க துண நின்னு வழிகாட்டி
என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது
பூமி போல ஒன் பொறும தீராதயா ஒன் பெரும
என்னைக்குதான் மாறிடுமோ இன்னல் படும் ஒன் நெலம
காலத்துக்கும் ஒன் கடம ஓயலயே என்ன கொடும
ஏ கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவரே ஒன் அரும
எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ
எந்தன் வேர் தேடும் மேகம் நீ
மூச்சுல கலந்தாடும் சொந்தம் நீ முடிவே இல்லாத பந்தம் நீ
நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம்
அட நீதாம்பா ஏ வாழ்க்கையோட ஆதாரம்.
Sent at 6:51 PM, Seen