மூடு பனியில் முகத்தை புதைத்து
மறைந்து மலரும் முழுமதியே!
நிந்தன் நானத்திற்கு காரணம் யாதோ?
கார்முகில் சூழ கரைகின்ற வெண்ணிலவே!
நிந்தன் மௌனத்திற்கு காரணம் யாதோ?
அந்திசூழ அரும்பும் ஒற்றை திங்களே!
நிந்தன் சாந்தத்திற்கு காரணம் யாதோ?
நிதம் நீ காணும் அற்ப மானுடர்கள்
நின்னை ஆயிரம் கவி பாடி புகழ்ந்தும்
நின்னை ஆயிரம் துதி பாடி மகிழ்ந்தும்
கர்வம் என்பதே சிறிதும் இன்றி
கண்ணை கவர்கின்ற பட்டத்து அரசியே!
நிந்தன் தன்னடக்கத்திற்கு காரணம் யாதோ