ஓம் பனிப்புலம் ஸ்ரீ முத்து மாரி தாயே
அரோகரா.. அரோகரா ..அரோகரா....
ஓம் பனிப்புலம் ஸ்ரீ முத்து மாரி தாயே
அரோகரா அரோகரா .அரோகரா...
உலகை காக்கும் உத்தமியே முத்துமாரி தாயே.
உன் வாசல் தேடி வந்தோம் தினம் தினம் நாமே
பனிப்புலம் பதியில் வீற்றிருக்கும் முத்துமாரி தாயே
பக்தர் அடியவர்க்கு அருள் தருபவள் நீயே.
உலகை காக்கும் உத்தமியே முத்துமாரி தாயே
உன் வாசல் தேடி வந்தோம் தினம் தினம் நாமே
பனிப்புலம் பதியில் வீற்றிருக்கும் முத்துமாரி தாயே
பக்தர் அடியவர்க்கு அருள் தருபவள் நீயே
மீனாட்சி காமாட்சி அபிராமி அன்னபூரனி
ஓம் சக்தி பராசக்தி பனிப்புலத்து முத்துமாரி.
மீனாட்சி காமாட்சி அபிராமி அன்னபூரனி
ஓம் சக்தி பராசக்தி பனிப்புலத்து முத்துமாரி.
கோலாகலமாக கொடியேற்றம் ஏறுவாயம்மா
கோடி கோடி மக்களின் குல தெய்வம் நீயம்மா
வேட்டை ஆடி விளையாடி வீதி உலா வரும் நாயகி
வேண்டும் வரம் தந்து மக்களை காக்கும் சக்தி.

பார் போற்றும் பரவசமாய் சப்பறத்தில் வருவாய்
பக்தர்களின் குறைகளை தீர்த்து நீயும் அருள்வாய்
தேர் ஏறி வீதியிலே திருப்பவனி வரும் தேவி
தீர்த்தம் ஆட சம்பில் துறை தீர்த்தக்கரை செல்லும் மாரி

வானுயர்ந்த கோபுர அழகினை பார் வணங்கிடும் மக்களின் மனங்களை பார்
பூங்காவன நன்நாளில் திருக்கல்யாணம் தான்
உன் புகழ் பாடி கவி தரும்
R றயித்தன் நான்

மீனாட்சி காமாட்சி அபிராமி அன்னபூரனி .
ஓம் சக்தி பராசக்தி பனிப்புலத்து முத்துமாரி.
மீனாட்சி காமாட்சி அபிராமி அன்னபூரனி
ஓம் சக்தி பராசக்தி பனிப்புலத்து முத்துமாரி