🎵 அறிவே தெய்வம்
(Adapted from Subramania Bharathi · Zona-Ready · Carnatic Uprising Vocal Format)
---
🎶 PALLAVI
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று
தேடி அலையும் அறிவிலிகாள்!
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே
தெய்வமுண்டாமெனல் கேளீரோ?
---
🎶 SARANAM 1
**வேடம் பலகோடிகள் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே—
ஆங்கோர் வேடத்தை நீர் உண்மையென்று
கொள்வீரென்றவ் வேத மறியாதே.
நாமம் பலகோடிகள் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே—
ஆங்கோர் நாமத்தை நீர் உண்மையென்று
கொள்வீரென்ற நான்மறை கண்டிலதே.**
---
🔁 PALLAVI (Repeat for musical lift)
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று…
---
🎶 SARANAM 2
**உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே—
இங்கு கொள்ளற் கரிய பிரமமென்று
ஏமறை கூவுதல் கேளீரோ?
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்து—
பல கள்ளமதங்கள் பரப்புதற்கோர்
மறை காட்டவும் வல்லீரோ?**
---
🔁 PALLAVI (Return · Soft swell)
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று…
---
🎶 SARANAM 3
**கவலைத் துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்—
நீவிர் அவலை நினைந்து மிம்மெல்லுதல்
போலிங்கு அவங்கள் புரிவீரோ?
ஒன்று பிரமமுளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்—
என்றும் ஒன்று பிரமமுளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.**
---
🎶 FINAL PALLAVI (Crescendo → Fade Out)
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று
தேடி அலையும் அறிவிலிகாள்!
அறிவொன்றே தெய்வம்—அதனை
உள்ளத்தில் உணர்வீராக!
(Fade out with chorus humming “அறிவே… தெய்வம்…”)
---
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU