போராட்டமே போராட்டமே வாழ்க்கையாகுமா? போர்க்களமே போர்க்களமே வீடாகுமா ஊர் கூடுதே ஊர் கூடுதே ஊர் கோலமாய் பேர் சொல்லுமே பேர் சொல்லுமே நம் வீரத்தை பகைவர் நடுங்கவே பகைவர் நடுங்கவே நம் தீரத்தால் நாள் காணுமே நாள் காணுமே காலம் செல்லவே வாள் வெல்லுமே வாள் வெல்லுமே வாகை சூடவே கழனி எல்லாம் கழனி எல்லாம் கதிர் ஆகுமே மழை தூவுமே மழை தூவுமே மண் வாசமே இடி முழக்கமே இடி முழக்கமே முரசு கொட்டுமே மின்னல் வெட்டுமே மின்னல் வெட்டுமே எதிரிகள் ஓட நெஞ்சம் இனிக்குமே நெஞ்சம் இனிக்குமே அறம் பேண மன்றம் தேடுதே மன்றம் தேடுதே புகழ் சொல்ல ஓராயிரம் ஓராயிரம் கனவுகள் காண ஓயாமல் ஓயாமல் நினைவுகள் ஆக்க தீராத தீராத வேட்கை கொள்ள ஆராத ஆராத ரணங்கள் மழுங்க ஆறறிவு ஆறறிவு ஓங்கும் குரலாய் அத்தனையும் அத்தனையும் மண்ணில் சேர மானுடம் காக்க மானுடம் காக்க மடைமை ஒழிய மனிதம் மட்டுமே மனிதம் மட்டுமே நிலைக்க வேண்டும் மாண்பில்லா மாண்பில்லா மகுடம் எதற்கோ மாசு கொண்ட மாசு கொண்ட மலர்வளையம் எதற்கோ தூசு இல்லா தூசு இல்லா காற்று வேண்டும் சோர்வில்லா சோர்வில்லா நிலை வேண்டும் ஆன்றோர் தம் ஆன்றோர் தம் கூற்று வெல்ல வளி எல்லாம் வளி எல்லாம் புகழ் மணக்க சான்றோர் தம் சான்றோர் தம் அன்பைப் பொழிய மாசில்லா மாசில்லா மனிதம் பேண காசில்லா காசில்லா கறைகள் மறைய மனிதம் காப்போம் மனிதம் காப்போம் வையகம் போற்ற புனிதர் எல்லாம் புனிதர் எல்லாம் மனிதம் வளர்ப்போம் மண் செழிக்க மண் செழிக்க மனிதம் வளர்ப்போம் மனிதம் மனிதம் மனிதம் என்றே மணியாய் காப்போம் மனிதம் மனிதம் மனிதம் என்றே மணியாய் காப்போம்