அரசடித்தீவு மாரியம்மா ....
அகிலத்தில் நீயே நாதியம்மா ...
விரைந்தே ஓடி வந்திடம்மா ...
விழிநீர்ப் பெருக்கைத் தடுப்பதற்கே.
அரசடித்தீவு மாரியம்மா
அகிலத்தில் நீயே நாதியம்மா
விரைந்தே ஓடி வந்திடம்மா
விழிநீர்ப் பெருக்கைத் தடுப்பதற்கே.
கண்பார்த் தருளும் தேவியம்மா - நீ
கவலைகள் போக்கும் கருணையம்மா
கண்பார்த் தருளும் தேவியம்மா - நீ
கவலைகள் போக்கும் கருணையம்மா
எண்ணங்கள் ஈடேற வைப்பாயே - நான்
ஏற்றங்கள் கொண்டே உயர்ந்திடவே
எண்ணங்கள் ஈடேற வைப்பாயே - நான்
ஏற்றங்கள் கொண்டே உயர்ந்திடவே
அரசடித்தீவு மாரியம்மா ....
அகிலத்தில் நீயே நாதியம்மா ...
விரைந்தே ஓடி வந்திடம்மா ...
விழிநீர்ப் பெருக்கைத் தடுப்பதற்கே.
துன்பந்தான் எம்மை வாட்டுதம்மா - நாளும்
துடைத்திட வரும்நாள் ஏதோ சொல்
துன்பந்தான் எம்மை வாட்டுதம்மா - நாளும்
துடைத்திட வரும்நாள் ஏதோ சொல்
அன்பினைப் பொழியும் ஆத்தாளே - ஓடி
அருகினில் வருவாய் அமைதிபெற.
அன்பினைப் பொழியும் ஆத்தாளே - ஓடி
அருகினில் வருவாய் அமைதிபெற.
அரசடித்தீவு மாரியம்மா ....
அகிலத்தில் நீயே நாதியம்மா ...
விரைந்தே ஓடி வந்திடம்மா ...
விழிநீர்ப் பெருக்கைத் தடுப்பதற்கே.