தாயே தாயே
நீதானே என் சேயே சேயே
🙏
என் ஊனும் நீயே
உயிரும் நீயே
🙏
என் உண்மையும் நீயே
என் தன்மையும் நீயே
🙏
என் தேகம் நீயே
என் வேகமும் நீயே
🙏
என் விழியும் நீயே
என் ஒளியும் நீயே
🙏
என் மூச்சும் நீயே
என் பேச்சும் நீயே
🙏
என் குரலும் நீயே
என் குருதியும் நீயே
🙏
என் கால்களும் நீயே
என் தோள்களும் நீயே
🙏
எனை தாங்கும்
பூமியும் நீயே
🙏
எனை ஏந்தும் சாமியும் நீயே
🙏
என் இசையும் நீயே
என் திசையும் நீயே
🙏
என்னை செலுத்தும் விசையும் நீயே
🙏
புவியும் நீயே
என்னில் இருக்கும் கவியும் நீயே
🙏
என் அறமும் நீயே
என் கரமும் நீயே
🙏
என் காற்றும் நீயே
🙏
நான் போற்றும் சாமியும் நீயே
🙏
என் தாயே தாயே
அது நீயே நீயே
🙏
நீயே நீயே
என் சேயே சேயே🙏