🎧 ZONA-READY MAAND RAGA VERSION
Opening PRELUDE (Chorus Only — for beat & lift)
[CHORUS]
தானா தணணனா தானா தணணனா
தானா தணணனா… தந்ததானா!
(Repeat once for build)
---
904 – “என்னால் பிறக்கவும்” (Vayalur)
[FEMALE]
என்னால் பிறக்கவும்
என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும் —— கண்களாலே
[MALE]
என்னால் அழைக்கவும்
என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும் —— பெண்டிர் வீடு
[FEMALE]
என்னால் சுகிக்கவும்
என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் —— தொந்தநோயை
[CHORUS]
என்னால் மலரிக்கவும்
என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் —— இங்குநானார்
---
[MALE]
கன்னார் உரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா அமுதப் பதம் —— தந்தகோவே
[FEMALE]
கல்லார் மனத்துடன் இல்லை மனத்தவர்
கண்ணார் அடியிற் டளம் —— கண்டவேலா
[MALE]
மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளி நிற்கொளும் —— தங்கரூபன்
[CHORUS]
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு —— தம்பிரானே
---
🎶 TRANSITION TO 974 (Chorus — Rhythmic Lift)
[CHORUS]
தானா தணணனா தானா தணணனா
தானா தணணனா… தந்ததானா!
---
974 – “மாலையில் வந்து” (Ilanchi)
[MALE]
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலைய நங்கன் —— மலராலும்
[FEMALE]
வாடை எழுந்து வாடை செறிந்து
வாடை எறிந்த —— அனலாலுங்
[MALE]
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி —— தளராமுன்
[FEMALE]
கூடிய கொங்கை நீடிய அன்பு
ஊரவு மின்று —— வரவேணும்
---
[MALE]
காலனடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த —— முருகோனே
[FEMALE]
கான மடந்தை நாண மொழிந்து
காதல் இரங்கு —— குமரேசா
[CHORUS]
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழும் இலஞ்சி —— மகிழ்வோனே
[CHORUS]
சூரியனஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற —— பெருமாளே
---
🎺 OPTIONAL GRAND ENDING (Chorus Only)
[CHORUS]
தானா தணணனா தானா தணணனா
தானா தணணனா…
என்னால் பிறக்கவும்… மகிழ்வோனே…
(Soft Maand fade)
---
2 representative songs from Thiruppugazh [Song no.904&974]
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU