துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
ஒட்டகத்தை மேய்ச்சாதாண்டா தினக் கூலி..!
நம்ம ஷோக்காலி அங்க ஆனனாடா சீக்காலி..!
மச்சி குல்லா போடும் வேலை உனக்கு எதுக்குடா..?
வளைகுடா நாட்டுல முதுகு வளைவு எதுக்குடா..?
நம் நாட்டுலயே நெறைய வேலை இருக்குடா..!
காசு குறையானாலும் மிடுக்குடா..! உன்னாடுங்கறது
துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
அங்கே கசக்கி பிழியும் கஸ்மாலங்க நிறையடா..!
இங்கே உழைச்சா போதும் நம்ம நாடு செழிக்குண்டா..!
வெய்ய நாட்டில் வெந்து போவதெதுக்குடா..!
நம்ம மக்களோட வாழ்வதுதான் சிறப்புடா..!
துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
அம்மா அப்பா பாசம் அங்கே இருக்குமா..?
அன்பு கிடைக்குமா..? மனைவியோட அரவணைப்பு
உன் குழந்தைகளின் குறும்பை ரசிக்க முடியுமா..?
வேணான்டா கபாலி வெளிநாடு..!
உழைப்பதுல நீதாண்டா பெரியாளு..!
துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!