காலத்தில் புதையுண்ட அண்டத்தின்
ஒரு புள்ளி நானோ?!!!!
நொடித்து கரைந்திடும் பிண்டத்தின்
மறு புள்ளி தானோ?!!!!
சிந்தனைகள் எனதில்லை
வார்த்தைகளும் எனதில்லை
இருள் கொண்டு ஒரு பிளவில்
எனை வைத்தே புதைத்திட்டால்
பொருள் ஒன்றும் புலப்படுமோ
இருள் அதுவும் விலகிடுமோ
காலத்தில் புதையுண்ட அண்டத்தின்
ஒரு புள்ளி நானோ?!!!!
நொடித்து கரைந்திடும் பிண்டத்தின்
மறு புள்ளி தானோ?!!!!
விதி கொண்டு சூனியங்கள்
வினை கொண்டு எனை செய்யும்
சூட்சமத்தில் எதை சொல்ல
ஒன்றல்ல இரண்டல்ல
பல பொழுதின் படிமம் நான்
எனை கொண்டு எனை கொன்று
அறிவதுவும் கடினம் தான்
காலத்தில் புதையுண்ட அண்டத்தின்
ஒரு புள்ளி நானோ?!!!!
நொடித்து கரைந்திடும் பிண்டத்தின்
மறு புள்ளி தானோ?!!!!
காலத்தில் புதையுண்ட அண்டத்தின்
ஒரு புள்ளி நானோ?!!!!
நொடித்து கரைந்திடும் பிண்டத்தின்
மறு புள்ளி தானோ?!!!!