சம்பா நெல்லும் விளைஞ்சிருக்கு சாமந்திப் பூவும் பூத்திருக்கு
அல்லி பூவும் மலரலயே என் ஆசை நிலா நீயும் தேடலையே
பங்குனி மாதத்திலே பாக்கு வெற்றிலை மாத்திடவே
பரிசம் போடச் சொன்னவரே
எங்குதய்யா என் மனசு
தூங்காமல் என் கனவு
நித்திரையும் மறந்திடுச்சு சித்திரையும் கடந்திடுச்சு
சில்வண்டாய் சுத்துதய்யா..
சிகரம் தொட ஏங்குதய்யா...
மனசெல்லாம் மத்தாப்பாய் நினைவெல்லாம் தித்திப்பாய்
ஏங்குதய்யா என் மனசு
முறுக்கு மீசை வச்சவரே எனைக் கிறுக்குப்புடிக்கச் செஞ்சவரே...
இரட்டைச் சடைப்பின்னலிலே பின்னியதும் நிஜம் தானே..
உன்னைக் கனவாய் என்னியதும் வரம் தானே
ஊர் கூடி வாழ்த்திடவும் மணமகளாய் ஆண்டிடவும்
காத்திருக்கேன் கருவிழியாய்
கலங்காதே மன்னவனே
இமையாக வாழ்ந்திடலாம் இதயங்கொண்டுத் தேடிடலாம்
உனதன்பில் வீழ்ந்திடுவேன் உன்னோடு வாழ்ந்திடுவேன்
வருடங்கள் கடந்தாலும் வாலிபங்கள் தொலைந்தாலும் உனக்காகக் காத்திருப்பேன் வந்திடு கவி நிலவாய்............
என் ஆசை மச்சானே
பாடல் வரிகள் கவிஞர் புல்லாவழி சு.மாணிக்கம்