பல்லவி:
பூக்களும் பூக்குது பூமகள் பார்வையில்
பூவனமே... இனமே... கணமே மகிழ!
பூமியில் பூத்திட்ட பூக்களின் பூர்விகம்
பூமகராணியின் பூஜையில் புரிய!
அனுபல்லவி:
கண்டேன் இன்று கனிகளின் உறியை
தந்தேன் எந்தன் கவிதையின் நடையை!
கண்ணை மூட மனம் வரவில்லை
எல்லாம் வசந்தம் ஆ.... ஆ... ஆ..