ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாயம்
என் அப்பனே – என் மூச்சே
என் வாழ்வின் ஆதியே
நமசிவாயம் எனும் சத்தம்
என் வாழ்க்கையில் கேட்கும் நித்தம்
தூணிலும் என் அப்பன்
அனைத்து உயிரிலும் என் அப்பன்
என்னை படைத்தவன் அவனே
என் உயிர் மூச்சும் அவனே
ஓம் எனும் மந்திரம் நாவில்
தருகிறது.
ஆனந்தம் தாண்டவம்
அகமும் அவனே – உள்ளமும் அவனே
கண்ணுக்கு கண்ணாக காப்பவனே
என் உயிர் துளிரும் அவன் இருப்பான்
சிறு எறும்பிலும் அவன் நிற்பான்
நீர் நிலம் ஆகாயம் அனைத்திலும்
அவன் சுண்டு விரலில் அடங்கிடும்
அவனே என் அப்பன், அவனே என் அப்பன்
சிவம்
என்னும் சக்தி சொல்லை தந்தவன்
எப்போதும் அழியாதவன்
ஆறடி நிலம் கூட சொந்தமில்லை என புரிய வைத்தவன்
ஆனந்தத் தாண்டவம் ஆடுபவன்
அன்போடு வாழ்வை நடத்துபவன்
அவனே என் அப்பன், அவனே என் அப்பன்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய
ஹர ஹர ஹர ஹர நமசிவாய
ஓம் நமசிவாயம்… ஓம் நமசிவாயம்…