[Intro]
[Verse 1]
என் இதயம் சோர்ந்து போனதே
என் தேகத்தில் பெலநற்று தோய்ந்ததே
பார்வை மங்கி இருலானதே
உன் பிரிவில் என் வயது முதிர்ந்ததே
[Pre-Chorus]
என் இதயமே நீ பெலன்கொல்ல
என் தேகமே உன் ஆற்றலை பெற்றுகொள்
என் இனியவனின் நிழல் ஒன்று போதுமே
[Verse 2]
என் கைகள் கால்களில் ரத்தம் பாய்ந்தோடுமே
என் கண்களின் விழிகள் திறக்கட்டும்
என் அன்பனின் சத்தம் இதோ ஒலிக்குதே
[Bridge]
உன்னை தாண்டி செல்லும்போது என் விழிகள் பார்க்க மறந்தன
உன்னை கண்டதும் என் உயிர் துளிர்த்தது
உன் அருகில் மிக அருகில்
அரவணைக்க உன்னை கொஞ்ச
முத்தம் பகிர கட்டிக்கொள்ள இயலவில்லையே
[Chorus]
பார்த்தேன் உன்னை திரும்பி பார்த்தேன் மீண்டும் பார்த்தேன்
எனக்குள் இழந்ததை பெற்றுக்கொண்டேன்
அழைத்தேன் உன்னை அழைத்தேன்
உன் குரலினை கேட்டதும் இளமை ஆனேன்
என் இனியவனே
என் பிரியமே