அடுத்த நொடி கூட ...
சொந்தமில்லை...
மனிதா
உள்ளத்தில் வன்மம்
எதுக்கடா...
சீக்குப்பினிகளுக்கு
பஞ்சமில்லை..
மனிதா..
உனக்குள் கர்வம்
எதுக்கடா.
நிரந்தரமில்லா
உலகத்திலே...
சுயநலத்தில்
நீயும் ஆடுகிறாய்.
படைகள் இருந்தென்ன
பண பலங்கள் இருந்தென்ன
பட்டுன்னு போட்டா..
பொட்டுன்னு போகும்
உயிரடா ..
இதுல...
நமக்குள்
ஈகோக்கள்
ஏனடா...
நாளை
ஈக்கள்
மொய்க்கின்ற
தேகமடா..
நம்ம தேகமடா.
பொறுமையாயிருந்து
வறுமையைக் கடந்தால்
பெருமைக்கொள்வானே
இறைவன்.
பொறாமைக்குணம் கொண்டு
பெருமை பேர்கொண்டு இருந்தால்...
அருளளிக்க மாட்டானே
இறைவன்.
பலபேரை பார்த்தாலும்
பயமில்லா மனிதா
பாரிலே உன் ஆட்டம்
முடிந்தாகுமே...
பாரிலே முடிந்தாகுமே.
இதுல...
நமக்குள்
ஈகோக்கள்
ஏனடா...
நாளை
ஈக்கள்
மொய்க்கின்ற
தேகமடா..
நம்ம தேகமடா.அடுத்த நொடி கூட ...
சொந்தமில்லை...
மனிதா
உள்ளத்தில் வன்மம்
எதுக்கடா...
சீக்குப்பினிகளுக்கு
பஞ்சமில்லை..
மனிதா..
உனக்குள் கர்வம்
எதுக்கடா.
நிரந்தரமில்லா
உலகத்திலே...
சுயநலத்தில்
நீயும் ஆடுகிறாய்.
படைகள் இருந்தென்ன
பண பலங்கள் இருந்தென்ன
பட்டுன்னு போட்டா..
பொட்டுன்னு போகும்
உயிரடா ..