சூரியன் சனாதனமென்றால்
காற்று சமாதனம் ஆகும்!
ஜனநாயக ஆகாயத்தில்,
சூரியன் ஜொலிக்கிறான் – நிலைத்த சக்தி.
உயர்ந்த மரங்களுக்கு ஊட்டமளிக்கிறான்,
அதிக வெப்பத்தில் சிறிய உயிர்களைச் சுடுகிறான்.
அவன் ஒரு உணர்வு – ஆனால் இயக்கமற்றவன்.
காற்று, ஆற்றல் மிகுந்த பயணி –
எல்லோரையும் சமமாகத் தொட்டுப் போகிறான்.
இலைகளை தூக்குகிறான், கற்களைத் தவிர்கிறான்.
அவன் இயக்கம் – ஆனால் நெஞ்சம் கொண்டவன்.
சூரியன் சனாதனமென்றால்
காற்று சமாதனம் ஆகும்!
இருவரும் எப்போதும் ஆட்சி செய்யக்கூடாது.
ஜனங்கள் தங்களுடைய ஆகாயத்தை சுழற்ற வேண்டும் –
வெப்பத்தோடு விவேகம்,சக்தியோடு சகிப்பு,
வலதோடு இடது என்பவற்றைப் பரிமாற.
அப்போதுதான் ஜனநாயகம் மூச்சுவிடும், வளரும்.
The Sun is emotion without motion,
The Wind is motion with emotion.
---