*வெட்டி வேரு வாசம்*
*வெடல புள்ள நேசம்*
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
*வேருக்கு வாசம்*
*வந்ததுண்டோ மானே*
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம் ...
*பச்ச கிளியோ போட்டுக்கிருச்சு*
*இச்ச கிளியோ ஒத்துகிருச்சு*
*பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு*
*பச்ச மனசு பத்திகிருச்சு*
கைய கட்டி நிக்க சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
*சாமி கிட்ட கேளு*
*யாரு போட்ட கோடு*
*பஞ்சுக்குள்ள தீய வெச்சு*
*சுத்தி வச்சவக யாரு*
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம் ...
*உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்*
*கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன்*
*சொல்லாம தான் தத்தளிக்கிறேன்*
*தாளாம தான் தள்ளி நிக்கிறேன்*
பாசம் உள்ள பந்தம் இது
பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள
குண்டு வெக்க கூடாது
*புத்தி கெட்ட தேசம்*
*பொடி வெச்சு பேசும்*
*சாதி மத பேதம் எல்லாம்*
*முன்னவங்க செஞ்ச மோசம்*
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம் ...