நீயும் நானும் சேர வேண்டும்
அந்த நிலவும் வானும் போல...
உன் கெஞ்சல்களில் நான் என்னை
தொலைத்து தேட வேண்டும்
காதலெனும் நம் நெடுஞ்சாலையில்...
நம்மை அந்த குயிலும் கானம்
பாட வேண்டும்
அந்த அடர்ந்த காட்டில்...
நாம் நம்மை நேசித்து பேசிய வார்த்தைகள்
தெய்வீக ஒளியில் மிதக்க வேண்டும்
அந்த காற்றின் சூட்சம வெளியில்...
நம்மை நாம் உணர்ந்து கரையும் நேரத்தில்
இந்த பிரபஞ்சம் பேரமைதிக் கொண்டு
சுழல வேண்டும்...
இதுதான் காதலின் நியதியா என்று
கேள்விகள் கேட்பதில் நாம்
எல்லை இல்லாத பிரபஞ்சத்தில்
புன்னகைத்து கலக்க வேண்டும்...
என் காதலே என் பெரும் காதலே...
என் காதலே என் பெரும் காதலே...